கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது: சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை: சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல வழிப்பறி கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து திருட்டு பைக்கும் பறிமுதல் ெசய்யப்பட்டது. சென்னையில் ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகளில் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 பெண்களிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர்களை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.வழிப்பறி கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவுப்படி மயிலாப்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டர் செந்தில் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதைதொடர்ந்து தனிப்படையினர் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று ஆய்வு செய்தனர். குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் ெவளியிட்டனர். தனிப்படை நடத்திய விசாரணையில், மூலக்கடை சத்தியவாணி முத்து நகர் பல்லவன் சாலையை சேர்ந்த மணி என்பவரின் மகன் ராகேஷ்(21) என்று தெரியவந்தது. இவன் சிறுவனாக இருந்த போது கொலை வழக்கில் கைது ெசய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டவன் என தெரியவந்தது.

 இவன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி, திருட்டு மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் உறுதி தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அதிரடியாக ேநற்று முன்தினம் கைது செய்தனர். அவன் வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் கடந்த 22ம் தேதி மயிலாப்பூரில் திருடப்பட்ட பைக் என விசாரணையில் தெரியவந்தது. தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டிய இவனது கூட்டாளி சீனுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவனிடம் தான் வழிப்பறி செய்த நகைகள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. குற்றவாளியை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் மயில் வாகணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories: