உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை  64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் 286 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கய இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Related Stories: