சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்

வாஷிங்க்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் கசகஸ்தான் நாட்டின், ஷெஸ்கஸ்கான் பகுதியில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த ஆனி மெக்ளைன் , ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மஸை சேர்ந்த கமாண்டர் ஓலெக் கோனென்கோ, கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டேவிட் செயிண்ட் ஜாக்ஸ் ஆகிய 3 பேர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் இன்று பூமிக்கு திரும்பினர்.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய சென்றிருந்த இந்தக் குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தில் 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில், அவர்கள் மூவாயிரத்து 264 முறை பூமியை வலம் வந்து, சுமார் 86 லட்சத்து 430 மைல் தூரத்துக்கு பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விண்வெளி வீரர்கள் மூவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Related Stories: