இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

டெல்லி : இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டார்.  ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். மேற்கு மண்டல கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த நடராஜன், தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்திய கடலோர காவல்படை

கடலோர பாதுகாப்பு பணியில் இந்தியாவை பொறுத்தவரை 2 படைகள் உள்ளன. ஒன்று கப்பற்படை (navy). மற்றொன்று இந்திய கடலோர காவல்படை(indian coast guard) ஆகும். 1978ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல்படையில் சுமார் 60 கப்பல்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உள்ளன. இந்த கடலோர காவல்படையில்  2 ஆண்டுக்கு அல்லது 3 ஆண்டுக்கு  ஒருமுறை மூத்த அதிகாரி ஒருவர் புதிய இயக்குனராக நியமிக்கப்படுவார். இந்நிலையில் இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய இயக்குனர் கே.நடராஜனின் பின்னணி

கே.நடராஜன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1981ம் ஆண்டு பி.எஸ்சி முடித்துள்ளார். சென்னை பெரம்பூர் நகரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் கே.நடராஜன் பயின்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் இந்திய கடலோர காவல்படைக்கு தேர்வு எழுதி, 1984ம் ஆண்டு கடலோர காவல்படையில் உதவி கமாண்டராக பொறுப்பேற்றார்.  பின்னர் படிப்படியாக முன்னேறி , தற்போது அவர் மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடல் வாயிலாக கடத்தி வந்த கும்பலை கே.நடராஜன் தலைமையிலான குழு மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: