சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் ஆபாசமாக வசைபாடும் ஆடியோ வெளியானதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை ஆபாசமாக வசைபாடும் ஆடியோ நேற்று வெளியானது. இது அமமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேனி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.