சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்த 10 இடங்களில் கைவரிசை பெண்களை எட்டி உதைத்து, எதிர்த்தவர்கள் மீது பைக் ஏற்றி செயின் பறிப்பு

* ஆசாமிகள் மீண்டும் அட்டூழியம் * தொடர் சம்பவங்களால் பொதுக்கள் அச்சம்

சென்னை: சென்னையில் ஒரே நாளில் 10 இடங்களில் பைக் ஆசாமிகள் நடந்து சென்ற  பெண் அதிகாரி உட்பட 10 பேரை தாக்கியும், எட்டி உதைத்தும், அவர்களில் ஒருவர் மீது பைக் ஏற்றியும்  23 சவரன் செயினை பறித்து சென்ற வழிப்பறி  கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை ேசர்ந்தவர் சுதாதேவி(57). இவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று விட்டு கோயில் குளம்  அருகே வீட்டிற்கு நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள் சுதாதேவியை வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்து, அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்தனர். அப்போது தடுக்க முயன்ற  சுதாதேவியை கடுமையாக தாக்கிவிட்டு செயினுடன் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுதாதேவி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கோட்டூர்புரம் எரிக்கரை சாலையை சேர்ந்தவர் செல்வி(37). இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வியிடம் முகவரி கேட்பது  போல், திடீரென அவர் அணிந்து இருந்த 5 சவரன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்து கொண்ட செல்வி தனது செயினை கொள்ளையர்கள் அறுத்து ெசல்லாதபடி பிடித்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள்  செல்வியை நடுச்சாலையிலேயே அவரை எட்டி உதைத்து கடுமையாக தாக்கி மீண்டும் செயினை பறிக்க முயன்றனர். ஆனால் செல்வி திருடன் திருடன் என பலமாக சத்தம் போட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில்  செல்வியின் மீது ைபக் ஏறியதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் செல்விக்கு கடுமையாக காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   மயிலாப்பூர் ராமகிருஷ்ணா 2வது ெதருவை சேர்ந்தவர் கபாலி. இவரது மனைவி சாந்தா(65). இவர் நேற்று முன்தினம் முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே நடந்து செல்லும் போது அவர் அணிந்து இருந்த 1 சவரன் செயினை பைக்  ஆசாமிகள் பறித்து சென்றனர். இதுகுறித்து சாந்தா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேபோல், ராயப்ேபட்டையில் நடந்து சென்ற ஜெயலட்சுமி என்பவரிடம் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை பலமாக தாக்கி  செயின் பறிக்க முயன்றனர். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடிவருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த ரமணி(40) என்பவரிடம் பைக் ஆசாமிகள் 4 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து ரமணி அளித்த புகாரின் படி எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளிக்கரணையில் பாலம்மாள்(68) என்ற மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து ெசன்றனர். அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் சுமிதா என்ற பெண்ணிடம் செல்போன் மற்றும் பணத்தையும், எழும்பூரில் மேரி 2 சவரன்  செயின், தேனாம்பேட்டை கீதா என்ற பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி, ஆதம்பாக்கத்தில் முத்துலட்சுமி என்பவரிடம் 5 சவரன், திருமங்கலத்தில் கற்பககனி 6 சவரன் என சென்னை முழுவதும்  ஒரே நாளில் 10 இடங்களில் 23 சவரன்  தாலி செயினை ைபக் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். ெசயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் பைக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: