×

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு விண்கல் எனக்கூறி 5 கிலோ கல்லை கொண்டு வந்த முதியவர்

கோவை:  கோவை பீளமேடு காந்தி மாநகரில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணன் (65). இவர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சுமார் 5 கிலோ எடை கொண்ட கல் ஒன்றை கொண்டு வந்தார். பின்னர் அந்த கல்லில் காந்தத்தை வைத்தார், அப்போது காந்தம் கல்லில் ஒட்டியது. இதனை தொடர்ந்து இது விண்கல் என்றும் இதனை கோவை கலெக்டர் ராசாமணியிடம் ஒப்படைத்து, இஸ்ரோ மற்றும் நாசா ஆராய்ச்சி நிலையத்திற்கு அந்த கல்லை அனுப்பி மாணவர்கள் படிப்புக்கு உதவ போவதாக தெரிவித்தார். இறந்து போன தனது அண்ணன் சிவசுப்ரமணியன் இந்த விண்கல்லை வைத்திருந்ததாகவும், அவர் உயிருடன் இருக்கும் போது இந்த விண்கல்லை பற்றி தன்னிடம் கூறியுள்ளார் என்றும் 50 ஆண்டுகளாக இந்த கல் தங்களது குடும்பத்தினரிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த கல்லை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராசாமணி இதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவிப்பதாக கூறினார்.

Tags : hearing , People's grievances, meteorites, elderly people
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்