வைப்பு நிதி மூலம் வழங்கப்படும் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?

புதுடெல்லி: தொழிலாளர் வைப்பு நிதி மூலம் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் ேகங்வார் தெரிவித்தார். மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அவர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியமான 1000ஐ உயர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளார் வைப்பு நிதி அலுவலகத்துடனும் மத்திய அறங்காவலர்கள் குழுவுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும்படி முன்னதாகவே அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. தொழிலாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தினால் அரசுக்கு 4,671 கோடியும், 3 ஆயிரமாக உயர்த்தினால் 11,696 கோடியும் செலவாகும். ஏற்கனவே கடந்த 2014ல் மோடி ஆட்சியில் தான் ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: