கூடுதல் நிதியை அரசுக்கு தர ரிசர்வ் வங்கி மீண்டும் மறுப்பு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான 6 உறுப்பினர் குழு மீண்டும் மறுத்துவிட்டது.  இந்த குழு தனது அறிக்கையை கடந்த சமர்பித்து இருக்க வேண்டும். ஆனால், இந்த இழுபறியால் அறிக்கை சமர்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள நிதியை மத்திய அரசுக்கு வழங்க, தற்போது உள்ள வழிகாட்டு விதிமுறைகளின்படி பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ரிசர்வ் வங்கி நிபுணர் குழு அறிக்கை சமர்பிப்பதும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், நிபுணர் குழு தனது அறிக்கையை, மத்திய அரசு ஜூலை 5ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Stories: