சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டிவிட்டர் பக்கத்தை ராகுல்காந்தி பின்தொடர்வது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அஸ்லம் பாஷா. தமிழக காங்கிரஸ் கமிட்டியில் சிறுபான்மை துறை மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் சிறுபான்மை துறை சார்பில் நடைபெறும் பல்வேறு கோரிக்கை போராட்டங்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி பிறந்த நாட்களில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தல், அன்னதானம் செய்தல், ரத்ததான முகாம்கள் குறித்து தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.