சாட்டிங்கை விட்டு வெளியேறினாலும் வீடியோ பிளே: புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் அப்

டெல்லி: வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் வாட்ஸ்-அப் செயலி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இதற்கிடையே, வாட்ஸ் அப் நிறுவனம் வாடிகையாளர்கள் அவப்போது புதிய வசதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சாட்டிங்கை விட்டு வெளியேறினாலும் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ பின்னணியில் பிளே செய்வது தடை படாத வகையில் புதிய வசதியை  வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஏற்கெனவே பிக்சர் இன் பிக்சர் எனும் பெயரில் ஒரு குழுவிலோ, தனி நபரோ அனுப்பிய வீடியோவை வாட்ஸ் ஆப்பிலேயே வைத்து பிளே செய்து பார்க்கும் வசதி நடைமுறையில் உள்ளது.ஆனால், அந்த சாட்டிங்கை விட்டு வெளியேறிவிட்டால் வீடியோ பிளே ஆவதும் தடைபட்டுப் போகும். இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப்பின் ஆன்ட்ராய்டு சோதனை பதிப்பில் இந்த நடைமுறையை வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. இந்தப் பதிப்பு ஐ.ஓ.எஸ்.சில் எப்போது வரும் என தற்போது அருதியிட்டுக் கூறமுடியாது என வாட்ஸ் ஆப் தரப்பில் கூறப்படுகிறது. வாட்ஸ் அப்பை பொறுத்தவரை ஆன்லைனில் இருந்தால் மட்டுமே தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: