கொலகம்பை பகுதி சாலையில் நடந்து சென்ற முதியவரை தலையில் தட்டி சென்ற காட்டு யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர் கொலகம்பை பகுதியில் காவல்நிலையம் அருகே நடந்து வந்தவரை காட்டு யானை ஓடிவந்து கோவில் யானை போல் துதிக்கையால் தலையில் தட்டி சென்றது. அவர் மயிரிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. நிலக்கிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் ஆக்காங்கே புற்கள் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றன.

இதனை உண்பதற்காக வனப்பகுதியில் இருந்து அவ்வபோது விலங்குகள் நகரப்பகுதிக்குள்ளும், கிராமப்பகுதிக்குள்ளும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று ஒரு குட்டியுடன் 5 காட்டு யானைகள் கம்பை பகுதி கிராமத்தில் புகுந்தது. அந்த கிராமத்தில் அதிக அளவு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதால் அதனை சாப்பிடுவதற்காக இந்த யானை கூட்டம் அங்கெ வந்தது. அதில் ஒரு யானை மட்டும் வழித்தவறி வேறுபகுதிக்கு சென்றது.

ஒருகுட்டியும் மற்ற மூன்று யானைகளும் தேயிலை தோட்ட வழியாக வந்தவை வனத்துறையினர் விரட்டி வந்த அதே நேரத்தில் இந்த ஒற்றை யானை வந்து அருகேயுள்ள கொலகம்பை பகுதியில் காவலநிலையம் உள்ளது. இந்த காவல்நிலையம் அருகே மிகுந்த ஆக்கிரோஷத்துடன் யானை ஓடிச்சென்ற போது ஒரு முதியவர் அப்பகுதியே சுமை தூக்கி கொண்டு நடந்து சென்றார்.

சென்றார். திடீரென அவர் திரும்பி பார்க்கையில் யானை வருவதைக்கண்டு அச்சத்தில் சிறிது ஒதுங்கி விற்றார். அப்போது யானை அவர் சென்று கோவில் யானை எப்படி துதிக்கையால் ஆசிர்வாதம் செய்யுமோ அதேபோல் இந்த யானை முதியவரின் தலையில் தட்டிவிட்டு மீண்டும் ஓடியது. இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பித்து சென்றார்.

Related Stories: