காய்கறிகளிடமிருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியா மனிதனுக்கு பரவும்: அமெரிக்கா ஆய்வு தகவல்

அமெரிக்கா: காய்கறிகளிடமிருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியா மனிதர்களுக்கு பரவக்கூடும் என அமெரிக்கா ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பொதுவாக சூப்பர் பக்ஸ் எனப்படும் பாக்டீரியா மாமிசம் உண்ணும் நபர்களைதான் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஆய்வு மேற்கொண்டது.

Advertising
Advertising

அதன்படி அந்நாட்டில்  ஆண்டுக்கு 20 லட்சம் பேர் னாய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியாவாழ் தாக்கப்படுவது தெரியவந்துள்ளது. அதில் 20% சதவீதம் பேருக்கு காய்கறி தாவரங்களில் இருந்து பரவியதாக அந்த ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஈ கோலி எனும் கெட்ட பாக்டீரியா தோற்றிய கீரை தாவரத்தை எலிக்கு கொடுத்து பரிசோதித்தனர்.

அப்போது வெகுநாட்கள் பயன்பாட்டிற்கு பின் அதன் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதித்து வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற, கலப்படமான காய்கறிகளை உண்ணும் மனிதர்களுக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியா பரவும் என அமெரிக்க ஆய்வு கூறியுள்ளது. எனவே இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: