நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

புதுடெல்லி:  நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தர வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநிலங்களைவியில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர் என்றும், இந்த 6 லட்சம் மாணவர்களும் தனியாக கோச்சிங் சென்டர்களுக்கு சென்றவர்கள் எனவும் திருச்சி சிவா சுட்டிக்காட்டினார்.

இந்த கோச்சிங் சென்டர்களுக்கு ஒரு மாணவருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள் என்றால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இந்த கோச்சிங் சென்டர்கள் நீட் தேர்வை வைத்து சம்பாதிக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார். மேலும் இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பிஎஸ்., படிப்பில் சேர நீட் தேர்வு தடையாக இருப்பதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Related Stories: