×

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவி நாடியுள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனம்

டெல்லி: ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய இந்தமாத ஊதியமான ரூ. 150 கோடிக்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ள பி.எஸ்.என்.எல் ( BSNL ) நிறுவனம் செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலையில் நெருங்கிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ. 90,000 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்து நாட்டிலேயே அதிக நட்டத்தை சந்தித்த முதன்மையான பொதுத்துறை நிறுவனமாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2018 முதல் 2019 வரை பி.எஸ்.என்.எல்- இன் கடன் ரூ. 14 ஆயிரம் கோடியாக உள்ளது. அந்த நிறுவனம் கடைசியாக லாபமீட்டியது 2008 முதல் 2009 வரை கால கட்டத்தில் மட்டுமே என கூறப்படுகிறது. அப்போது கூட ரூ. 575 கோடி மட்டுமே லாபத்தை ஈட்ட முடிந்தது. அதன்பிறகு தொடர் சரிவைச்  பி.எஸ்.என்.எல் நிறுவனம் சந்தித்தது. தற்போது ரூ. 1.7  லட்சம் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

8 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒளியிழையால் இணைக்கப்பட்டு 65 ஆயிரம்  செல்போன் கோபுரங்கள் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு ஊழியர்களுக்கான மாத ஊதியம் உள்ளிட்ட செலவு அதிகரித்தல், மோசமான மேலாண்மை, மற்றும் நவீனமயமாக்கலில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

இதர தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 4ஜி சேவையைத் தொடர்ந்து 5ஜி சேவைக்கு ஆயத்தமாகி வரும் நிலையில் உள்ளது. பி.எஸ்.என்.எல் மட்டும் இன்னும் 3ஜி சேவையிலேயே தொடர்வது கட்டத்திற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மொபைல் சந்தாதாரர்களின் சந்தை பங்குகள் 10% அளவுக்கு குறைந்து விட்டன. மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இயக்குவதற்கான செலவில் 66% விழுக்காடு ஊழியர்களுக்கான ஊதியத்திற்கே சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜூன் மாதம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 850 கோடி ஊதியத்தை மத்திய அரசின் உதவியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் கேட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் இணை செயலருக்கு இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் உடனடி நிதிஉதவி அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இல்லாதபட்சத்தில் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவது முடியாமல் பொய் வெட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : BSNL ,Central Government , Employee, Wage, Federal Government, Assistance, BSNL
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...