இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் : மாயாவதி அறிவிப்பு

லக்னோ : இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். சமீபத்திய நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி அமைத்தனர். ஆனால் மக்கள் அதிரடி திருப்பமாக 2 கட்சிகளையும் புறக்கணித்து உபி.,யில் பா.ஜ.,வுக்கே அதிக வெற்றியை அளித்தனர். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சொற்ப இடங்களே கிடைத்தன. இந்நிலையில் கட்சியின் தோல்விக்கு அகிலேசே காரணம் என மாயாவதி கூறியுள்ளார்.

இது தொடர்பா அவர் கூறியிருப்பதாவது: அகிலேசின் சமாஜ்வாடி கட்சி யாதவர் மற்றும் தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதனால் மக்கள் தோல்வியை தந்துள்ளனர். மேலும் முலாயம்சிங் , பா.ஜ., வுடன் மறைமுகமாக கை கோர்த்துள்ளார். இரு கட்சியினரும் சேர்ந்து எனக்கு எதிராக சதிகள் செய்தனர். குறிப்பாக தாஜ் மகால் வழக்கை எனக்கு எதிராக புனைந்தனர். பா.ஜ.,வுடன் கைகோர்த்து தனக்கு எதிராக அகிலேஷ் கட்சியினர் சதி செய்வதாக மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனால் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி  கட்சியுடனான கூட்டணி முறிந்த நிலையில் மாயாவதி இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Related Stories: