×

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ராஜினாமா

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்னுடைய பதவிக்காலம் முடிவடைய 6 மாதக்காலம் இருக்கின்ற நிலையில் விரால் ஆச்சார்யா திடீரென ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சார்யா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2017-ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் ஒருவராக ஆச்சார்யா இணைந்தார். விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் முதல் இளைய துணை கவர்னர் ஆவார்.

அண்மையில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தனிப்பட்ட சொந்த காரணத்தால் ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். படேலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மத்திய நிதி ஆணையக்குழுவின் உறுப்பினர் சக்திகாந்த தாஸ் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags : Viral Acharya ,Reserve Bank of India , Reserve Bank of India, Deputy Governor Viral Acharya ,resigns
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...