ஜெட் ஏர்வேசுக்கு எதிரான திவால் நடவடிக்கை தொடங்கியது

புதுடெல்லி: கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் சேவையை நிறுத்தியது. இந்த நிறுவனம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் 8,500 கோடி. இந்த நிறுவனத்தை மீட்க முடியாததால், கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு, மும்பையில் உள்ள தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்தது. இதை தீர்ப்பாயம் ஏற்றது. இதை தொடர்ந்து, திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: