வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10,000 கோடிக்கு மேல் முதலீடு

புதுடெல்லி: வெளிநாட்டு முலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இந்த மாதம் இதுவரை 10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.இந்த மாதம் கடந்த 3ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் 10,312 கோடி முதலீடு செய்துள்ளனர். இதில் பங்குகளில் 552.07 கோடி, கடன் சந்தையில் 9,760.59 கோடி முதலீடு ஆகியவையும் அடங்கும். இதற்கு முன்பும் 4 மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கடந்த மே  மாதத்தில் 9,031.15 கோடி, ஏப்ரலில் 16,093 கோடி, மார்ச் மாதத்தில் 45,981 கோடி, பிப்ரவரி மாதத்தில் 11,182 கோடி என பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். நடப்பு மாதத்தில் பங்குச்சந்தையில் மிக குறைந்த அளவே முதலீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டியுள்ளனர். அடுத்த மாதம் 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அறிவிப்புகளுக்கு ஏற்ப இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் முடிவு செய்வார்கள் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: