பாரிஸ்: பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட ஜெர்மனி அணி தகுதி பெற்றது.கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) நைஜீரியா அணியுடன் மோதிய ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் பாப் (20வது நிமிடம்), டாப்ரிட்ஸ் (27’), ஷுல்லர் (82’) ஆகியோர் கோல் அடித்தனர். நைஜீரியா வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.