எப்ஐஎச் மகளிர் ஹாக்கி தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

ஹிரோஷிமா: ஜப்பானில் நடைபெற்ற எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி தொடரில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் கேப்டன் ராணி 3வது நிமிடத்திலும், குர்ஜித் கவுர் 45வது மற்றும்  60வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஜப்பான் வீராங்கனை கனோன் மோரி 11வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.

தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ராணி விருது பெற்றார். அதிக கோல் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் குர்ஜித் கவுர் முதலிடம் பிடித்தார். பைனலுக்கு முன்னேறியபோதே ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: