ஹாலே: ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபினுடன் (28 வயது, 33வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் (37 வயது, 3வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-2) என வென்று முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் காபினின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த பெடரர் 7-6 (7-2), 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.