அளவுக்கு மீறி அப்பீல் கோஹ்லிக்கு அபராதம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தின்போது, நடுவரிடம் அவுட் கோரி அளவுக்கு அதிகமாக அப்பீல் செய்ததாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஜஸ்பிரித் பூம்ரா வீசிய 29வது ஓவரில் ஆப்கன் பேட்ஸ்மேன் ரகமத் ஷா காலில் பந்து பட்டதும், எல்பிடபுள்யு முறையில் அவுட் வழங்கக் கோரி கோஹ்லி மீண்டும் மீண்டும் முறையிட்டு வலியுறுத்தினார். இது நடத்தை விதிமுறையை மீறிய  செயல் என  கள நடுவர்கள் புகார் செய்தனர்.

கோஹ்லி தனது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் ஒரு தரக்குறைவு புள்ளியும் வழங்கப்படுவதாக ஐசிசி போட்டி  நடுவர் கிறிஸ் பிராடு அறிவித்தார்.2018 ஜனவரியில் கோஹ்லி ஒரு தரக்குறைவு புள்ளி பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. 24 மாதங்களில் ஒரு வீரர் 4 டிமெரிட் புள்ளிகள் பெற்றால் அது ஒரு சஸ்பென்ஷன் புள்ளியாக மாற்றப்படும். 2  சஸ்பென்ஷன் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

Related Stories: