ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகள்... சண்டைக்கு தயார் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த நாட்டுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் கடற்பரப்பில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஈரான் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டொனால்டு டிரம்ப் ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் அதை திரும்ப பெறறார்.

Advertising
Advertising

இருந்தாலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை பரிசீலனையில் உள்ளதாக எச்சரித்துள்ளார். ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் தங்கள் வான் எல்லைகளை பாதுகாக்க ஈரான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது.

ஈரான் மீது ஏற்கனவே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் தடைகள் தடைகள் விதிக்கப்படுவதாக டிரம்ப அறிவித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறி வருகிறது என்பது அமெரிக்காவின் புகாராகும். அணு ஆயுத தயாரிப்புக்கான யுரேனியம் செரிவூட்டலை 10 நாட்களில் தொடங்கப்போவதாக ஈரான் கூறியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Related Stories: