முறையற்ற வர்த்தகம் இந்தியாவுக்கு தலைவலி

புதுடெல்லி: முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க இந்தியா தீவீரம் காட்ட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், இந்த மாத துவக்கத்தில் (ஜூன் 5ம் தேதி) வர்த்தகத்தில் முன்னுரிமை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவித்தார். அதிபரின் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு பின்னர் இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் ஹிங்டைசர் வெளியிட்ட செய்தியில், “இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றால், இந்தியாவில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை அளித்துள்ளது.

Advertising
Advertising

, கடந்த 2017ல் 5.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியா பற்றி நாங்கள் நீண்ட காலம் அதிக அளவில் கவலைப்பட்டோம். அவர்களுடன் எங்களுக்கு பல்வேறு விஷயங்களில் பிரச்னை நீடித்தது. இது பற்றி பல மாதங்களாக அவர்களிடம் எடுத்துக் கூறி எச்சரித்தோம், ஆனால், உரிய பலன் கிடைக்கவில்லை” என்றும் லிங்டைசர் தெரிவித்தார்.

Related Stories: