அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சராக மார்க் நியமனம்: ஓராண்டுக்குப் பிறகு டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராக மார்க் என்பவரை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜிம் மேட்டிஸ், தனது பதவியை கடந்தாண்டு ராஜினாமா செய்தார். அதன் பிறகு, இத்துறைக்கு அதிபர் டிரம்ப் புதிய அமைச்சரை நியமிக்காமல் இருந்து வந்தார். இப்பதவிக்கு பேட்ரிக் சனகன் என்பவர் விண்ணப்பம் செய்தார். பின்னர், அதை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனுக்கு சிறந்த தலைவரை நியமிக்கும்படி அதிபர் டிரம்பை, அமெரிக்க எம்பி.க்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இப்பதவியில் மார்க் எஸ்பர் என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார். இவர் தற்போது, அமெரிக்க தரைப்படையில் செயலாளராக பணியாற்றுகிறார். இந்த நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே, மார்க் எஸ்பர் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க முடியும்.

Related Stories: