ஒய்எஸ்சிஏ டிராபி பரோடா வங்கி சாம்பியன்

சென்னை: ஒய்எஸ்சிஏ கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா வங்கி (பெங்களூர்) சாம்பியன் பட்டம் வென்றது. யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் சங்கம் நடத்திய தேசிய அளவிலான  ‘ஒய்எஸ்சிஏ டிராபி’ கிரிக்கெட் போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 54 அணிகள் பங்கேற்றன. இந்த தொடர் மே 1ம் தேதி  முதல் ஜூன் 16ம் தேதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில்  பரோடோ வங்கி (பெங்களூர்) - இந்தியா சிமென்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா வங்கி  முதலில் விளையாடி 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜீஷன் அலி 67 பந்துகளில் 90 ரன்களும், சுஜித்  34ரன்களும் எடுத்தனர். இந்தியா சிமென்ட்சின் கவுசிக் 4 விக்கெட்களை அள்ளினார்.

அடுத்து விளையாடிய இந்தியா சிமென்ட்ஸ் 28.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும் இழந்து 192ரன்கள் மட்டுமே எடுத்தது.  அதனால் பரோடா வங்கி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தியா சிமென்ட்ஸ் சார்பில் கவுசிக் 53 ரன், சிவகுமார் 41ரன் எடுத்தனர். பரோடா வங்கியின் கவுதம் 5 விக்கெட், அக்ஷய் 3 விக்கெட் வீழ்த்தினர்.இறுதிப் போட்டி மற்றும் தொடரின் சிறந்த வீரராக பரோடா வங்கியின் கவுதம் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பேட்ஸ்மேனாக  பரோடா வங்கியின் கார்த்திக், சிறந்த பந்து வீச்சாளராக  இந்தியா சிமென்ட்சின் சாய் கிஷோர் தேர்வாகினர். சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கும், சிறந்த வீரர்களுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கட ரமணா கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Related Stories: