இங்கிலாந்தில் பெண்ணை தாக்கிய அமைச்சர் நீக்கம்

லண்டன்: இங்கிலாந்தில்  பெண் சமூக ஆர்வலர் ஒருவரை தாக்கியது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தால்  அமைச்சர் மார்க் பீல்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனில்  நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட்   உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்கள் 40 பேர் திடீரென நுழைந்து கோஷமிட்டனர்.  இதனால்,  அங்கு குழப்பம் ஏற்பட்டது. அப்போது, பெண் சமூக ஆர்வலர் ஒருவர் அமைச்சரை  நோக்கிச் செல்ல முயன்றார். இதையடுத்து, அவர் அருகில் அமர்ந்திருந்த துணை  அமைச்சர் மார்க் பீல்டு உடனே எழுந்து அப்பெண்ணின் கைகளை பின்புறம் கட்டி  தள்ளிக் கொண்டு சென்று அவரை அங்கிருந்து வெளியேற்றினார். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த பிரதமர் தெரசா மே,  அமைச்சர் மார்க் பீல்டு மீதான விசாரணை முடியும் வரை அவர் தற்காலிக நீக்கம்  செய்யப்படுவதாக அறிவித்தார்.

Related Stories: