மாமூல் வசூலிக்கும் போலீஸ் மீது வழக்கு : உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை : மாமூல் வசூலிக்கும் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து கூறியதாவது; காவல்துறையினர் மாமூல் வாங்கினால், மக்கள் எப்படி காவல்துறையை நண்பனாக பார்ப்பார்கள் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமூல் வசூலிப்பது சீருடைப் பணியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

காவல் நிலையங்கள், பொது இடங்களில் மாமூல் வசூலிப்பதை கட்டுப்படுத்த சுட்டறிக்கை, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், ஓட்டல்கள், சந்தைகள் உள்பட பொது இடங்களில் மாமூல் வசூலிப்பவர்கள் மீது தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும், மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

மேலும் லஞ்சம் வாங்குவோர் மீது வழக்குப்பதிவது தொடர்பாக அதிகாரிகளுக்கு உள்துறை செயலரும் டி.ஜி.பியும் 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மாமூல் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories: