ஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

ஹிமாசலப் பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.


× RELATED இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில்...