திம்பம் மலை பாதையில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் அமல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் பயணிக்க அனைத்து வகை வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளதால் இந்த வழியே அதிக அளவிலான சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertising
Advertising

இதை தொடர்ந்து அதன் ஒரு பகுதியாக திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு சோதனை முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பண்ணாரி சோதனை சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்லால் நுழைவு கட்டண ரசீதை வழங்கி துவக்கி வைத்தார். மேலும் சோதனை அடிப்படையிலான முயற்சி என்பதால் முதல் நான்கு நாட்களுக்கு கட்டணமில்லா அனுமதி ரசீது வழங்கப்படும் எனவும், அடுத்த வாரம் முதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: