வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

புதுடெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்று பிற்பகலில் பல இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


× RELATED மழை வேண்டி மகா யாகம்