×

அரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்

லக்னோ: உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரேலி நகரில் நான்கு நாட்களுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு திடீரென மூச்சுக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஆண்கள் பிரிவில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதிக்க மறுத்து பெண்கள் பிரிவிற்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து பெண்கள் பிரிவுக்கு கொண்டு சென்ற போது அங்கு போதிய படுக்கைகள் இல்லை என கூறி குழந்தையை அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த பெற்றோர் சுமார் 3 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அப்போது தான் குழந்தை ஊர்வசி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தை பலியானதற்கு காரணமான மருத்துவர்களில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : birth ,government doctors , Lucknow, Government Doctors, Outcast, 4 Day, Baby, Kills, Doctor, Workplace
× RELATED ராஜஸ்தானில் இக்கட்டான நேரத்தில்...