கன்னியாகுமரியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி 10 ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை என மீனவர்கள் புகார்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தேங்காய்ப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் 120 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது 10 ஆண்டுகளாகியும் பணிகள் முடிவடையவில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள மீனவர் கூறியதாவது, முகத்துவாரம் என்பது குறைந்தது 15 மீட்டராக இருக்க வேண்டும், ஆனால் இங்கு 5 மீட்டர் கூட இல்லாமல் இருக்கின்றது என்றும், மேலும் இதனுடைய ஆழம் 7 மீட்டர் இருக்க வேண்டும் ஆனால் தற்போது 2 மீட்டர் மட்டுமே உள்ளது.

ஏனெனில் அந்த அளவில் மண் நிரம்பி உள்ளதாகவும், மேலும் ஒரு ஆர்பருக்கு டீசல் பம்பு , ஐஸ் பிளான்ட் , அலுவலகம்  மற்ற வசதிகள் இருக்க வேண்டும் ஆனால் ஒரு கழிவறை கூட இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்றும், மேலும் இங்கு ஒரு மின்வசதி, பாதுகாப்பு வசதிகள் கூட இந்த முகத்துவாரத்தில் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திறக்கப்படாத மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் சேவை வரியாக வசூலிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேவை வரி வசூலிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: