×

அமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களைகொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளை நிற வாயு வெளியேறியதால் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு நெவேடா பகுதியில், ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று உட்டா பகுதியிலிருந்து நெவேடா நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் வெல்ஸ் பகுதி அருகே சென்றபோது, திடீரென தடம் புரண்டது. இதில், 22 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததில், பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணெய் மற்றும் டீசல் கொட்டியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ராணுவ முகாமுக்கு எடுத்து சென்ற வெடிபொருட்கள் அடங்கிய பெட்டி தடம்புரளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுமினியம் ஆக்சைடு என்ற வேதிப்பொருள் கசிந்து வெள்ளை நிற வாயு வெளியேறியதால், உட்டா- நெவேடா ஆகிய மாநிலங்களுக்கிடையிலான நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்திற்கு சென்ற ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : military camp ,highway ,United States , US, military camp, freight train, highway
× RELATED விளையாட்டு பொருட்கள் விற்பனை சரிவு