ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சப் கலெக்டர் என கூறி பெண் வீட்டாரிடம் 120 சவரன் மோசடி: இளைஞர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார் ஆட்சியர் வேலை பார்ப்பதாக கூறி  வரதட்சணையாக 120 சவரன் நகையை வாங்கி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertising
Advertising

தேனி  மாவட்டம் புளுகுத்தி பகுதியை சேர்ந்த மாரியப்பன் எனபவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பாண்டிசெல்வியை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பு தான் ஒரு சப் கலெக்டெர் என கூறி பெண் வீட்டாரிடம் 120 சவரன் நகையை வரதட்சணையாக வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் 8 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.    

இந்நிலையில் பாண்டிசெல்விக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மாரியப்பன் சப் கலெக்டெர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது மகளிர் காவல்நிலையத்தில் பாண்டிச்செல்வி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாரியப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: