மோடி அரசு மோசமாக செயல்படுகிறது, அதில் மாற்றுக் கருத்து இல்லை; ஆனாலும் மத்திய அரசுடன் நல்லுறவு: சந்திர சேகரராவ் பேட்டி

ஐதராபாத்: மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும் என தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபாரமாக வெற்றி பெற்றது. 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது, பாஜக 1 இடத்தில் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால் தெலுங்கனாவில் அறுதிபெரும்பான்மையுடன் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதேபோல் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட ஒருமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா முதல்வராக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி சந்திரசேகர ராவ் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா முதல்வரும் ,ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமாக சந்திரசேகரராவ், நாட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத மாற்றி அணி உருவாக வேண்டும். அரசியலில் தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்று அணிக்கு தலைமை ஏற்க தான் தயாராக உள்ளதாக கூறியிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததில் நாட்டுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் தேசிய அளவில் 3-வது அணி உருவாக்க பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால், அது எதுவும் சந்திரசேகரராவ்-விற்கு கை கொடுக்கவில்லை.  

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ், நரேந்திர மோடியின் அரசு, மிக மோசமான பாசிச அரசாக செயல்படுகிறது என, முதன்முதலில் நான் தான் கூறினேன். அதில் இதுவரை மாற்றுக் கருத்து இல்லை என்றார். மேலும் எங்கள் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: