×

ஆவடி மாநகராட்சி பகுதியில் 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு தடை விதித்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தது. ஆவடி மாநகராட்சி ஆணையர் ஜோதிகுமார் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர், பிரகாஷ், சந்திரன், சிவகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆவடி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது புதிய ராணுவ சாலை, நேரு பஜார் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா ₹1500 அபராதம் விதித்தனர். மேலும்,  தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிப்பதோடு, உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Awadi Corporation , Avadi Corporation, plastic, confiscated
× RELATED மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: நோய்தொற்று அபாயம்