கார் திருட்டு; 2 பேர் கைது

துரைப்பாக்கம்: மதுரவாயலை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தணிகை (45). கடந்த 7ம் தேதி தனது கார் ஒன்றை ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து சத்தியா, ரிச்சர்ட், கணேசன், பாரதி ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார். கடந்த 10ம் தேதி கானாத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கிவிட்டு இன்னோவா காரை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென கார் மாயமானதால் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக நெற்குன்றத்தை சேர்ந்த கணேசன், நீலகிரியை சேர்ந்த பாரதி ஆகிய 2 பேரை கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: