×

இத்தாலியை வீழ்த்தியது பிரேசில்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை போராடி வென்றது. அந்த அணியின் மார்தா 74வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்தார். உலக கோப்பை ஆட்டங்களில் அவர் அடித்த 17வது கோல் இது. சி பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் (தலா 2 வெற்றி, தலா 6 புள்ளி) நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. இந்த பிரிவில் இடம் பெற்றிருந்த ஜமைக்கா அணி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடம் பிடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.Tags : Brazil ,Italy , Brazil , Italy
× RELATED பிரேசில் நாட்டிற்கு கோவாக்சின்...