குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி அனைத்து தரப்பு மக்களுக்கான குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.  தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்தவும், நீர்நிலைகளை தூர்வாரி பராமரித்து, பாதுகாக்கவும் முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளோடு மேலும் அரசு அத்துறையின் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து, வியூகங்கள் வகுத்து நல்ல பல முயற்சிகளில் ஈடுபட்டு தண்ணீர் தேவையான அளவிற்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

ஒட்டு மொத்தத்தில் தமிழக அரசு மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு விரைந்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவது மட்டுமல்லாமல், தண்ணீரின் அவசிய, அவசர தேவையை முக்கிய கவனத்தில் கொண்டு குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்..

Related Stories: