மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைகிறது பதிவு கட்டணம் ரத்தாகிறது

புதுடெல்லி: பேட்டரி வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு 5%  ஆக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுக்கவும் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதற்கேற்ப, நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், மந்த நிலையில் காணப்படும் ஆட்டோமொபைல் சந்தையை மீட்டெடுக்கவும், டெக்ஸ்டைல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், ரியல் எஸ்டேட் துறைகள் மேம்படும் வகையிலு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

பதிவு கட்டணம் ரத்து:  மத்திய மோட்டார் வாகன விதிகள் வரைவு அறிக்கையை சாலை போக்குரவத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது. இதில், மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டண விலக்கு டூவீலர்கள் உட்பட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். இதுகுறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: