×

வாழப்பாடி அருகே 145அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகள் தீவிரம்: உலகிலேயே மிக உயரமானது

வாழப்பாடி:  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை குகை கோயில் உள்ளது. இதன்  நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்துடன் சேர்த்து இதன்  உயரம் 140அடி. இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த முருகன் சிலை 145 அடி உயரம் கொண்டுள்ளது.  சிலை மட்டும் 126 அடியிலும் பீடத்துடன் சேர்த்து 145 அடியிலும் உலகில் மிக உயரமான முருகன் சிலையாக இது அமைகிறது என்று தெரிவித்தனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக பத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

 மலேசியாவில் உள்ள பத்துமலை கோயிலில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையிலான குழுவினர், வாழப்பாடியில் அமையவுள்ள முருகன் சிலையை முழுவீச்சில் வடிவமைத்து வருகின்றனர். இந்த சிலையானது  சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைக்கப்பட்டு வருவதால் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

Tags : Murugan ,Vanavadi , Statue of Lord Murugan
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...