×

விபத்து ஏற்படும் அபாயம்: குமரியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்.. கண்டுெகாள்ளாத போலீசார்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் வாகனங்களில் அதிகளவு லோடு ஏற்றி செல்லுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. மணல், ஜல்லி, கருங்கற்கள், செங்கல், மரத்தடிகள் என பலவகையான லோடுகளையும் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதோடு, சாலைகளும் பழுதடைந்து வருகின்றன. இதுபோல குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வைக்கோலுக்கு கேரளாவில் நல்ல கிராக்கி உள்ளது. இந்த வைக்கோல் ேலாடுகளை பகலில் கொண்டு சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் இரவு நேரங்களில் வைக்கோல்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் வைக்கோல் அளவுக்கு அதிகமாகவும், வாகனத்தின் இரு பகுதிகளிலும் மிகவும் நீண்டு வரும் வகையிலும் லோடு ஏற்றுகின்றனர். இதனால் வாகனம் செல்லும் வழியில் வேகமாக காற்று வீசினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் எதிரில் வரும் வாகனங்களும் செல்ல வழியில்லாமல் திணறுகின்றன. இதுபோன்று விதிமுறை மீறும் வாகனங்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. பணத்தை வாங்கிவிட்டு அனுமதித்து விடுகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் கடும் இடையூறாக விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : accident ,Kumari , Accident, Kumari, Vehicles, Police
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...