×

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் : கருவாட்டுடன் களி விருந்து

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு ஊர்மக்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு களி விருந்து கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சி ஏற்பட்டு ஏரிகள் வறண்டு நீர் ஆதாரங்கள் முற்றிலும் வற்றிவிட்டது. இதனால், விவசாயம் கேள்விக்குறியானதுடன், பல பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டையில் குடிநீர் பஞ்சத்தால் தவித்த மக்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்று எண்ணினர்.

அதன்படி, வெள்ளக்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மாரக்கா ஏரி பகுதியில் உள்ள குண்டாளம்மன், குறத்தி அம்மன் கோயில் மண்டபத்தில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, நேற்று அப்பகுதி மக்கள் 200 பேர் திரண்டு வந்து, இரண்டு கழுதைகளை கோயிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, கழுதைகளை அலங்கரித்து திருமணம் செய்து வைத்தனர். கழுதை திருமணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு கருவாடுடன் களி விருந்து படைத்தனர். இதனால் அந்தப்பகுதி திருவிழாக்கோலம் பூண்டது.

Tags : Clay , Marriage , donkeys for rain,banquet with a wreath
× RELATED களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே...