×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா

பர்மிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் மழையின் காரணமாக ஆட்டம் 49 ஓவருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.


Tags : South Africa ,New Zealand , World Cup Cricket, New Zealand Team, South Africa
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்