×

சென்னை நகரில் அதிகரிக்கும் காற்றின் மாசு அளவு : ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை : சென்னை நகரில் நிலவும் காற்றின் மாசு அளவு குறித்து ஏர் குவாலிட்டி இண்டக்ஸ் என்னும் அறிக்கையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சென்னை நகரின் காற்றின் மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் கடந்த 2016-17 ஆண்டு நிலவிய காற்றின் மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது தற்போது காற்றின் மாசின் அளவு அதிகரித்துள்ளது. சென்னையில் நிலவும் காற்றின் மொத்த மாசுவின் அளவு சராசரியாக 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டராக உள்ளது. சென்னையில் பிஎம்-10 மாசு அதிகரித்ததற்கு, அதிகப்படியான வாகன போக்குவரத்தும் இவற்றால் ஏற்படும் புழுதியுமே முக்கிய காரணம் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் அனுமதிக்கப்பட்ட மாசுவின் அளவு பிஎம்-10க்கு 60மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர், பிஎம்-2.5க்கு 40மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். சென்னையிலுள்ள பிற பகுதிகளிலும் பிஎம்-10 மாசுவின் அளவு 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகமாகவே உள்ளதாக இந்த ஆய்வில் எடுக்கப்பட்ட சோதனைகளில் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பிஎம்-10 மாசு அளவு 173 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவீட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.  குறைந்தபட்சமாக அடையாறு பகுதியில் இந்த மாசுவின் அளவு 107ஆக உள்ளது. தி.நகரில் 138, அண்ணா நகரில் 161, கீழ்ப்பாக்கத்தில் 128 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு காற்றில் மாசு கலந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : city ,Chennai , Increasing, air pollution levels, Chennai
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...