சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் போலீசில் தேவிகா தனது கணவன் மீது புகார் ஒன்றினை அளித்தார். அதில் அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாகவும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து 1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும் 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற பெண்ணையும் அஜித்குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஜோதி என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டு பேசிய போது தான் இந்த விவரங்கள் தெரியவந்ததாகவும் தேவிகா தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த புகார் குறித்து அஜித்குமாரிடம் போலீசார் அவிசாரணை நடத்திய போது திருமண மோசடி செய்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.


Tags : Chennai , Madras, Raising Up, 3 Girls, Cheating, Marriage, Person, Arrested
× RELATED தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற...