காட்டுத்தீ அணைய மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் : உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி : மழைக்காக பிரார்த்தனை செய்யும் படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் காற்றுத் தீயால் அரியவகை உயிரினங்களும் வனப்பகுதிகளும் அழிவதாக கூறி வழக்கறிஞர் ரிதுபர்ண உனியால் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். காட்டுத்தீயில் இருந்து வனத்தையும் உயிரினங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் வழக்கறிஞருமான உனியால் நேரில் ஆஜராகி மனுவை  உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மனுக்களுடன் பட்டியலிட வேண்டும் என்று கூறினார். அப்போது காற்றுத் தீ என்பது மிக தீவிரமான பிரச்சனை என்ற நீதிபதிகள், மனு மீது இந்த மாதம் 24ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினர். மனு மீதான விசாரணை நடைபெறும் காலம் வரை, காட்டுத்தீ அணைய மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories: