நீ என்ன புடுங்கிடுவியா... பயணியிடம் திமிராக பேசிய கண்டக்டர், டிரைவரின் லைசென்ஸ் ரத்து

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடைக்கு செல்ல பஸ் ஸ்டாண்டு சென்றுள்ளார் சென்னையில் இருந்து சென்ற ஒருவர். பண்டாரவடை வழியாக செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அந்த பயணியிடம் பண்டாரவடையில் பேருந்து நிற்காது என்று பஸ் டிரைவரும், கண்டக்டரும் தெரிவித்தனர். இது தொடர்பாக கண்டக்டருக்கும் - பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தை பயணி வீடியோ எடுத்தார். இதனை கண்ட பேருந்தின் ஓட்டுநர் எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு.. முதல்ல ஆனா பஸ்ஸ விட்டு முதல்ல கீழே இறங்கு என்று தெரிவித்தார். நான் ஏன் இறங்கணும்.. காசு தந்து தான் டிக்கெட் எடுக்கிறோம் என்று தெரிவிக்க ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.

பின்னர் ஓட்டுநர் பயணியிடம் நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.. என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த பயணி எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இறுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணில் பட அந்த ஓட்டுநர், கண்டக்டர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: